சுந்தர ராமசாமி (1931 - 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர். தமிழின் நவீனத்துவ இலக்கிய வடிவத்தைச் செழுமைப்படுத்துவதற்குக் கணிசமான பங்காற்றியவர். வடிவம், உள்ளடக்கம், மொழி ஆகியவற்றில் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருந்ததுடன் தமிழ்ப் படைப்புலகின் எல்லைகளையும் தன் படைப்புகளின் வழியே விரிவுபடுத்தியவர். படைப்புகளைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் அலசி இலக்கிய மதிப்பீடுகளை நிறுவியவர். புனைகதை, கவிதை, விமர்சனம், அனுபவப் பதிவுகள், பண்பாட்டுச் சிந்தனைகள், மொழியாக்கம் என இவருடைய எழுத்துச் செயல்பாடு பன்முகத்தன்மை கொண்டது. தீவிரமான வாசிப்பு, இலக்கிய நட்புகள், இலக்கியம் சார்ந்த உரையாடல்கள், கடிதப் போக்குவரத்துகள், விவாதங்கள் என இவர் வாழ்க்கை பெரும்பாலும் இலக்கியத்தை மையமாகக் கொண்டே இயங்கியது. நவீன தமிழிலக்கியத்தின் முக்கிய அடையாளங்களில் ஒருவர்
நான் எழுத்துத் துறையில் புகுந்த வருஷம் பிறந்த அடுத்த வீட்டுப் பெண் குழந்தை ஸாரி கட்டிக்கொண்டு கல்லூரிக்குப் போகிறது. அவளுக்குப் பதினைந்து வயது தாண்டியிருக்க வேண்டும். இந்தப் பதினைந்து வருடங்களில் என்ன சாதித்தேன் என இப்போதெல்லாம் அடிக்கடி என்னையே கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் படிக்க
பதின் வயசைக் கனவு காணும் வயசு என்று சொல்லலாம். அதிலும், ஏலாதவன் ரொம்பத்தான் கனவு காணுவான்; பகல் கனவு. இங்கே ஏலாதவன் என்பதை உடம்புக்கு ஏலாதவன் என்று கொள்ள வேண்டும். மாசக் கணக்காக, வருசக் கணக்காகப் படுக்கையில் கிடந்தால் சொல்லவே வேண்டாம். எனக்கும் அப்படித்தான் நேர்ந்திருக்கிறது. சுந்தர ராமசாமியைப் பற்றிய கி. ராஜநாராயணனின் நினைவுப் பதிவுகள் மேலும் படிக்க
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
சுந்தரராமசாமி தமது அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்வில் மூன்று நாவல்களைப் படைத்துள்ளார். அவை மூன்றும் அதனதன் வழியில் முக்கியமானவை; பொருள்சார்ந்து தனித்துவமானவை.‘ஒரு புளியமரத்தின் கதை’ ஓர் இடத்தின் கதை. ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ காலத்தின் மீதான விமர்சனம். ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ மனித உறவுகளின் மாண்பை வியக்கும் படைப்பு.இந்தத் தனித்துவமே இந்நாவல்களைக் காலத்தை விஞ்சிய ஆக்கங்களாக நிலைநிறுத்துகிறது. சு.ரா.வின் நாவல்களில் அபூர்வமான எளிமையும் இயல்பான அழகும் மிளிரும் நாவல் ‘குழந்தைகள் பெண்கள்ஆண்கள்’. லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் மொழிபெயர்ப்பில் வெளிவந்த இந்நாவலின் ஆங்கில ஆக்கம்2014ஆம் ஆண்டுக்கான கிராஸ்வேர்டு பரிசைப் பெற்றது.
Other Specification
பக்கம்: 656
விலை: 695
அன்று வெளியிடப்பட்டது: 1 ஜனவரி 1996
பொருள்: இலக்கியம்
வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு
"நான் செல்லும் பாதை என்னைக் கோவிலின் சந்நிதானத்திற்கு இட்டுச் செல்வதற்குள் நான் களைப்படைந்து போய்விடலாம். ஆனால் நடந்து செல்கிற பாதை சுத்தமான பாதையாக இருந்துவிட்டாலே போதும். அப்போது வழி நெடுகிலும் கோவில்கள்தாம்; வழி நெடுகிலும் கோபுரங்கள்தாம்."
"ஒவ்வொரு மனிதனிடமும் வெளியில் தெரியாத சிறகுகள் இருக்கின்றன. ஆழ்ந்த நம்பிக்கைகள் சார்ந்த செயல்பாடுகள் மூலமே இந்தச் சிறகுகள் தம் இருப்பை வெளிப்படுத்துகின்றன. சுய செயல்பாடுகள் மூலமே நாம் மேலான கல்வியைப் பெறுகிறோம். இந்தக் கல்வி நம் சிறகுகளைக் கண்டுகொள்ள நமக்கு உதவுகிறது."
"இன்றைய சிக்கல் மிகுந்த வாழ்க்கையைப் பற்றிய அறிவு படைப்பாளிக்கு இருந்தால்தான் அவன் துல்லியமான சொற்களைத் தேடிச் செல்லும் முயற்சியையே மேற்கொள்ள இயலும்."
"சிந்தனைகள் கூர்மைப்படுத்தும் சமூகத்தில்தான் உணர்வுகளும் கூர்மைப்பட்டுச் செயல் உருவங்கள் வேகம் கொள்கின்றன. விவாதங்களும் முனைப்புக் கொள்கின்றன."
"காலம் சுற்றி வந்தாவது சத்தியத்தை முத்தமிடும் என்பது கலைஞனின் நம்பிக்கை. இவ்வுண்மை பொய்யென நிரூபிக்கப்பட்டாலும் அவன் தனது ‘மூட’ நம்பிக்கையிலேயே உறுதியாக நிற்பான்."
"‘இந்த மண்ணில் உன்னதங்கள் எதுவும் முளைக்காது’ என்று ஒரு விமர்சனப் பார்வை உண்டு. சகல உன்னதங்களையும் இந்த மண்ணில் முளைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவன் நான்."
"வாழ்க்கையின் சகல துறைகளிலும் உண்மையைத் தேடுவது அக்கினிப் பரீட்சைக்கு நம்மை ஆளாக்கிக்கொள்வதாகும்."
"தனக்கு ஏற்படக்கூடிய பெரும் பாதிப்பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் ஒருவன் எதிர் பேச முற்படும்போது அவன் பேச்சை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்."
"ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளிகள் வேண்டும். சில சமயம் காலத்தின் இடைவெளி. சில சமயம் தூரத்தின் இடைவெளி."