தோட்டியின் மகன்

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு. நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு - தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.

பிற விவரக்குறிப்பு

பக்கம்:175

விலை:200

அன்று வெளியிடப்பட்டது: 2010

பொருள்: நாவல்

வகை: நாவல்/மொழிபெயர்ப்பு

தொலைவிலிருக்கும் கவிதைகள்

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

பசுவய்யா என்னும் புனைபெயரில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்துள்ள கவிதைகள் இவை. உலகக் கவிதைகளின் வளத்தையும் வீச்சையும் இவை வெளிப்படுத்துகின்றன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த சீன, ஜப்பானியக் கவிதைகளையும் நவீன ஐரோப்பியக் கவிதைகளையும் அமெரிக்கக் கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது.

பிற விவரக்குறிப்பு

பக்கம்:176

விலை:200

அன்று வெளியிடப்பட்டது: 2004

பொருள்: கவிதை

வகை:கவிதை/மொழிபெயர்ப்பு