வாழும் கணங்கள்

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமது எழுத்துகள் மூலம் தமிழ் வாழ்வில் ஆழ்ந்த சலனங்களை ஏற்படுத்தியவர் சுந்தர ராமசாமி. தமது இறுதிக் காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ், புதிய பார்வை, காலச்சுவடு, இந்தியா டுடே, காலம் ஆகிய இதழ்களில் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள், உரைகள், ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை, நாட்குறிப்புகள், எழுதத் திட்டமிட்டிருந்த அடுத்த படைப்புப் பற்றிய குறிப்புகள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இது.

பிற விவரக்குறிப்பு

பக்கம்: 176

விலை: 430

அன்று வெளியிடப்பட்டது: 2009

பொருள்: இலக்கியம்

வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு

மூன்று நாடகங்கள்

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி எழுதி, ஏற்கெனவே இதழ்களில் வெளிவந்த ‘உடல்’, ‘யந்திரத் துடைப்பான்’ நாடகங்களும் இதுவரை பிரசுரமாகாத ‘டாக்டர் நாகராஜன்’ நாடகமும் முதன்முதலாக நூல் வடிவம் பெறுகின்றன. சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல நிலைகளிலும் சிறப்பாக வெளிப்பட்டுள்ள சுந்தர ராமசாமியின் ஆளுமை நாடகங்களிலும் செயல்பட்டுள்ளதை இத்தொகுப்பு உணர்த்தும். நாடகம் குறித்து சுந்தர ராமசாமி எழுதிய இரண்டு கட்டுரைகளும் இந்நூலின் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

பிற விவரக்குறிப்பு

பக்கம்: 138

விலை: 250

அன்று வெளியிடப்பட்டது: 2020

பொருள்: இலக்கியம்

வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு

சுந்தர ராமசாமி கவிதைகள்

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமியின் பாடுபொருள்கள் சமகால வாழ்வைச் சார்ந்தவை. கடந்தகாலத்தின் கீர்த்தியையோ எதிர்காலத்தின் கனவையோ அவை கவிதைப் பொருட்களாகப் பெரும்பாலும் ஏற்பதில்லை. நிகழ்காலத்தின் நடப்புபற்றி, அதில் மறைந்திருக்கும் சிக்கல்கள் சிறுமைகள் புதிர்கள் வியப்புகள் ஆகியவற்றை அலசுகின்றன. அலசலின் முத்தாய்ப்பாகச் சமகால வாழ்வு சார்ந்த ஒரு கருத்துநிலையை வந்தடைகின்றன. அந்தக் கருத்தாக்க நிலை அவரே குறிப்பிட்டதுபோல கோட்பாடுகள் சார்ந்து அமைவதல்ல.

பிற விவரக்குறிப்பு

பக்கம்: 232

விலை: 290

அன்று வெளியிடப்பட்டது: 1 ஜனவரி 1996

பொருள்: இலக்கியம்

வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு

நினைவோடைகள்

பிரமிள்

ஆசிரியர்: பிரமிள்

படிமங்களின் தொகுப்பாக பிரமிள் உருவாக்கிய பல கவிதைகள் இருக்கின்றன. ஒரே படிமத்தை விளக்கமாக எழுதிய கவிதைகளும் இருக்கின்றன. நாம் ஏற்கனவே பேசிய கவிதை ‘காவியம்’. அதில் நான்கு வரிகளில் முழுமையான ஒரு படிமம் இருக்கிறது. அவ்வரிகளில் எளிமை இருக்கிறது. அழகு இருக்கிறது. சாந்தம் இருக்கிறது. இம்மாதிரியான கவிதைகளை எழுதிய பின்னர் எப்படி சிடுக்கான கவிதைகளுக்குப் போக முடிந்தது என்ற ஆச்சரியம் எனக்கு இருக்கிறது. சுகுமாரன்: பிரமிளின் தனி ஆளுமை அல்லது கவி ஆளுமை என்பதே சிடுக்கானது. அது இலகுவாக இருக்கும் கணத்தில்தான் ‘காவியம்’ போன்ற கவிதைகள் உருவாகின்றன. இன்னொரு கவிதை ‘எல்லை’. அதில் நேரடியான இரண்டு படிமங்கள் இருக்கின்றன. எரிந்து கருகும் விறகு, அதிர்கிற தந்தி ஆகிய இரண்டு படிமங்களின் இயக்கமாகவே கவிதை முன்னேறுகிறது. கவிதையில் பெரிய சிக்கல்கள் எதுவும் இல்லை. சிடுக்குகளும் கிடையாது. அப்படியானதொரு மனோநிலை தொடர்ந்து பிரமிளுக்கு இருக்கவில்லை என்று நினைக்கிறேன். - எம். யுவன். (பிரமிள் குறித்த உரையாடலிலிருந்து)

பிற விவரக்குறிப்பு

பக்கம்: 128

விலை: 150

அன்று வெளியிடப்பட்டது: 2005

பொருள்:கவிதை

வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு

ஜி. நாகராஜன் ஆக்கங்கள்

ஆசிரியர்: ஜி.நாகராஜன்

நவீன தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான ஜி. நாகராஜனின் இலக்கிய ஆளுமையைத் துல்லியமாக அறிய உதவும் தொகுப்பு இது. ‘ஜி நாகராஜன் படைப்புகள்’ (காலச்சுவடு பதிப்பகம், 1997) தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘நாளை மற்றுமொரு நாளே’ (நாவல்), ‘குறத்தி முடுக்கு’ (குறுநாவல்), 33 சிறுகதைகள், உரைநடைப் பகுதிகளுடன், மேலும் இரண்டு சிறுகதைகள், மூன்று கவிதகைள், இலக்கிய அனுபவக் கட்டுரை, வாசகர் கடிதங்கள், சு. ரா.வுக்கு நாகராஜன் எழுதிய நான்கு கடிதங்கள் மற்றும் ஆங்கிலப் படைப்புகள் (சிறுகதைகள், ஒரு நாவல் மற்றும் குறிப்புகள்) அடங்கிய முழுமையான தொகுப்பு.

பிற விவரக்குறிப்பு

பக்கம்: 640

விலை: 751

அன்று வெளியிடப்பட்டது: 2006

பொருள்: சிறுகதை

வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு

அந்தரத்தில் பறக்கும் கொடி

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

இலக்கிய விமர்சனம், இலக்கிய ஆளுமைகளுடனான அனுபவ பதிவுகள், இலக்கியம் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்த எதிர்வினைகள், ஆளுமைகள் பற்றிய மதிப்பீடுகள் என சுந்தர ராமசாமியின் உரைநடை எழுத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுப்பு இது. தமிழ்ச் சமூகம் மற்றும் இலக்கியச் சூழல் குறித்த ஆழ்ந்த, கரிசனமிக்க விமர்சனங்கள் லாவகமான மொழியில் உரத்து வெளிப்படும் இக்கட்டுரைகள் தமிழ் இலக்கியச் சூழலில் சு.ராவைத் தனித்து இனங்காட்டுகின்றன. ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலத் தொடர்ச்சிகொண்ட அவரது கருத்துகளில் வெளிப்படும் நேர்மையும் பிடிப்பும் அவரோடு கருத்தியல் ரீதியாக உடன்பாடு கொள்ளாதவர்களால்கூட மறுதலிக்க இயலாதவை. சீரிய வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு இது.

பிற விவரக்குறிப்பு

பக்கம்: 232

விலை: 290

அன்று வெளியிடப்பட்டது: 2020

பொருள்: இலக்கியம்

வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு