ஒரு புளியமரத்தின் கதை
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
1966இல் வெளிவந்த ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. இந்நாவல் அளவுக்குத் தமிழ் வாசகர்களின் உயர் ஆதரவைத் தொடர்ந்து பெற்றுவரும் இன்னொரு படைப்பு தமிழில் இல்லை. மலையாளத்திலும் இந்தியிலும் கன்னடத்திலும் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் ‘நவீன கிளாசிக்’ வரிசையில் வெளியிட்டுள்ளது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையைப் பெற்றது. ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே. எம். ஜார்ஜ் இந்நாவலை நோபல் பரிசுபெறத் தகுதியானதெனக் குறிப்பிடுகிறார். 2021 ஆம் ஆண்டு அமேசான் கிராசிங்கின் ஆங்கிலப் பதிப்பாக ‘ஒரு புளியமரத்தின் கதை’ உலக அரங்கில் வாசகர்களைச் சென்றடைய உள்ளது.
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 224
விலை: 250
அன்று வெளியிடப்பட்டது: 1966
பொருள்: இலக்கியம்
வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு
ஜே.ஜே. சில குறிப்புகள்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
தமிழ் இலக்கியத்தின் சத்தான பகுதியை ஜே.ஜேயின் மூளைக்குள் தள்ளிவிட வேண்டும். அவன் எழுத்தில் நம்மைப் பற்றி, நம் இலக்கியம் பற்றிக் குறிப்பே இல்லை. ஏன்? எதுவும் அவனிடம் போய்ச்சேரவில்லையா? நடுவில் பாஷையின் சுவர்கள். மனிதனைப் பிளவுபடுத்தும் சுவர்கள். உண்மையைச் சார்ந்து நிற்க வேண்டிய மனிதனை, சத்தத்திற்கு அடிமைப் படுத்திவிட்ட முடக் கருவி. அதை நொறுக்கி விடலாம். அறியவும் அறிவிக்கவும் மனிதன் கொள்ளும் பேராசையின் முன் தூள்தூளாகப் பறந்துபோகும் அது. வள்ளுவனின், இளங்கோவின், கம்பனின், பாரதியின் அவகாசிகளை எப்படிக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியும்? உலக அரங்கில் கவிதைச் சொத்தின் பெரும் செல்வந்தர்களை எப்படிப் புறக்கணிக்க முடியும்? எல்லோருக்கும் நம்மீது அலட்சியம் கவிந்துவிட்டதோ என்று சந்தேகப்பட ஆரம்பித்தேன். அவர்களிடம் போய்ச்சேரும் தமிழ்ப் படங்கள். அவர்களுக்குப் பார்க்கக் கிடைக்கும் நாடகங்கள். நம் அரசியல்வாதிகளின் வாள்வாள் கத்தல்கள். என்ன நினைப்பார்கள் நம்மைப் பற்றி?
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 224
விலை: 250
அன்று வெளியிடப்பட்டது: 2020
பொருள்: இலக்கியம்
வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
சுந்தரராமசாமி தமது அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்வில் மூன்று நாவல்களைப் படைத்துள்ளார். அவை மூன்றும் அதனதன் வழியில் முக்கியமானவை; பொருள்சார்ந்து தனித்துவமானவை.‘ஒரு புளியமரத்தின் கதை’ ஓர் இடத்தின் கதை. ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ காலத்தின் மீதான விமர்சனம். ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ மனித உறவுகளின் மாண்பை வியக்கும் படைப்பு.இந்தத் தனித்துவமே இந்நாவல்களைக் காலத்தை விஞ்சிய ஆக்கங்களாக நிலைநிறுத்துகிறது. சு.ரா.வின் நாவல்களில் அபூர்வமான எளிமையும் இயல்பான அழகும் மிளிரும் நாவல் ‘குழந்தைகள் பெண்கள்ஆண்கள்’. லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் மொழிபெயர்ப்பில் வெளிவந்த இந்நாவலின் ஆங்கில ஆக்கம்2014ஆம் ஆண்டுக்கான கிராஸ்வேர்டு பரிசைப் பெற்றது.
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 656
விலை: 695
அன்று வெளியிடப்பட்டது: 1 ஜனவரி 1996
பொருள்: இலக்கியம்
வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு
அக்கரைச் சீமையிலே
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு ‘அக்கரைச் சீமையில்.’ 1959இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் இந்த மறுபதிப்பில் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள ‘உணவும் உணர்வும்’ சுந்தர ராமசாமியின் முழுச் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெறாத கதை. “இத்தொகுதியிலுள்ள பல்வேறு கதைகளும் வாசகர்களின் உள்ளத்தில் பசுமை குன்றாமல் நின்று நிலவும் என்பதில் ஐயமில்லை” என்கிறார் ரகுநாதன், முதல் பதிப்பின் முன்னுரையில்.
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 144
விலை: 175
அன்று வெளியிடப்பட்டது: 2014
பொருள்: சிறுகதை
வகை: விற்பனையில் சிறந்தவை
பிரசாதம்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் இரண்டாவது தொகுப்பு இது. இதில் ‘பிரசாதம்’, ‘சன்னல்’, ‘லவ்வு’, ‘ஸ்டாம்பு ஆல்பம்’, ‘ஒன்றும் புரியவில்லை’, ‘வாழ்வும் வசந்தமும்’, ‘கிடாரி’, ‘சீதை மார்க் சீயக் காய்த்தூள்’, ‘மெய் + பொய் = மெய்’ ஆகிய ஒன்பது கதைகள் உள்ளன. “சுந்தர ராமசாமியின் சிறுகதைகளிலே உருவ அமைதியுடன் கருத்தமைதியும் கலந்து வந்துவிடுகிறது என்பது அவருடைய தனிச் சிறப்பாகும். ஜானகிராமனின் கிண்டல், கசப்புடன், சுந்தர ராமசாமி தனது என ஒரு ஆழத்தையும் கனத்தையும் சேர்த்துக் கொண்டுவிடுகிறார்” என்கிறார் இத்தொகுப்பு குறித்த மதிப்புரையில் க.நா. சுப்ரமண்யம்.
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 120
விலை: 150
அன்று வெளியிடப்பட்டது: 2005
பொருள்: சிறுகதை
வகை: விற்பனையில் சிறந்தவை
திரைகள் ஆயிரம்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமியின் கதைத் தொகுப்புகளை மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் மூன்றாவது நூல். 1975இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள ‘திரைகள் ஆயிரம்’, ‘இல்லாத ஒன்று’, ‘தயக்கம்’ ஆகிய குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு.
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 104
விலை: 100
அன்று வெளியிடப்பட்டது: 1975
பொருள்: குறுநாவல்
வகை: விற்பனையில் சிறந்தவை
பல்லக்குத் தூக்கிகள்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
‘ஓய்ந்தேன் என்று மகிழாதே’ என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் தடயங்கள் இந்தக் கதைகளில் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன. பழக்கம் தரும் ஆசுவாசத்தைக் கால் விலங்காகக் கருதி உதறி விட்டுப் பாதுகாப்பற்ற பாதைகளில் பயணம் செய்யும் துணிச்சல் தமிழ்ச் சூழலில் அரிது. அத்தகைய பயணத்தைக் கலை உலகில் நிகழ்த்திய மிகச் சிலரில் ஒருவரான சுந்தர ராமசாமி இந்தக் கதைகளில் முற்றிலும் புதிய உலகத்தையும் கலை நோக்கையும் வெளிப்படுத்துகிறார். வெளிவந்த காலத்தில் இலக்கிய உலகில் பெரும் அதிர்வுகளை எழுப்பிய இந்த ஐந்து கதைகளும் இன்றளவும் புதுமை குன்றாமல் வீரியத்தோடு இன்றைய வாசகரை எதிர்கொள்கின்றன.
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 72
விலை: 90
அன்று வெளியிடப்பட்டது: 2013
பொருள்: சிறுகதை
வகை: விருதுபெற்ற எழுத்தாளர்
பள்ளம்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
சு.ரா.வின் ஆறு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். 1985ஆம் ஆண்டில் வெளிவந்த தொகுப்பின் மறு பிரசுரம். ‘ஆத்மாராம் சோயித்ராம்’, ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ போன்ற சு.ரா.வின் மிகச்சிறந்த கதைகளாகப் பேசப்பட்ட கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 64
விலை: 100
அன்று வெளியிடப்பட்டது: 1985
பொருள்: சிறுகதை
வகை: விற்பனையில் சிறந்தவை / விருதுபெற்ற எழுத்தாளர்
சுந்தர ராமசாமி சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஓர் இனிய அனுபவமாக்கும் அதே நேரத்தில் தீவிரமான அனுபவத்தின் தொந்தரவுக்கும் நம்மை உள்ளாக்குகின்றன. செறிவும் நேர்த்தியும் கொண்ட மொழியோடு உறவுகொள்ளும் சுகத்தை அளிக்கும்போதே உக்கிரமான தேடலின் கனத்தையும் நம் மீது சரியச் செய்துவிடுகின்றன. மனிததுக்கத்தையும் அவலங்களையும் மட்டுமன்றி நெகிழ்வையும் விகாசத்தையும் பதிவுசெய்கின்றன. வாழ்வுக்கும் நமக்கும், காலத்திற்கும் நமக்கும், மொழிக்கும் நமக்கும் இடையேயான உறவுகளைச் செழுமைப்படுத்துவது ஒரு கலைஞனின் முக்கியமான பங்களிப்பாக இருக்க முடியும். சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் இதைப் பெருமளவில் நிறைவாகச் செய்திருக்கின்றன. -பின்னுரையில் அரவிந்தன்
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 904
விலை: 850
அன்று வெளியிடப்பட்டது: 2020
பொருள்: இலக்கியம்
வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
புனைவுலகம் அதன் அடுத்த கட்டத்தை அடைந்திருப்பதைக் காட்டும் கதைகள் இவை, தீவிரமும் நுட்பமும் குன்றாமல் எளிமையான முறையில் கதைகளைச் சொல்ல முடியம் என்பதை - உணர்த்தும் பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. தமிழ் மண்ணை மட்டுமின்றி அமெரிக்க , வாழ்வையும் தழுவியதாக வியர் இந்தப் புனைகை வெளி, நிலம், பண்பாடு ஆகியஎல்லைகளைக் கடந்த தளத்தில் மனித வாழ்வின் பற்களை 'மிகுந்த அக்கறையுடனும் தீராத வியப்புடனும் திறந்த மனத்துடனும் ஆராய்கின்றன. கவித்துவம் ததும்பும் சு.ரா.வின் மொழிநடை இறுக்கம் தளர்ந்த தீவிரத்துடன் வாசகருடன் நட்பார்ந்த தொனியில் 'உரையாடுகிறது. சொல்லும் மொழியைவிடவும் சொல்லாமல் உணர்த்தும் மெள்ளத்தின் வலிமையை அதிகம் நம்பும் சு.ரா., தன் புனைவு வெளியினுள் வாசகருக்கான வெளியையும் அதன்மூலம் திறந்துவைத்தார் .
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 176
விலை: 225
அன்று வெளியிடப்பட்டது: 2015
பொருள்: சிறுகதை
வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு
ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
ஆறுபகுதிகளாக அமைந்துள்ள இந்த விமர்சன நூலில், முதல் மூன்று பகுதிகள் கவிதை, விமர்சனம், இலக்கிய மரபு குறித்தும் மற்றவை பிச்சமூர்த்தியின் படைப்புலகம் கவிதைகள், சிறுகதைகள் குறித்தும் அமைந்துள்ளன. பிச்சமூர்த்தி என்னும் கலைஞனின் படைப்பாளுமையை முழுமையாக அறிமுகப்படுத்தும் இந்தநூல், இன்றைய கவிதை குறித்து விரிவாகப் பேசுகிறது. “ஒரு தேர்ந்த விமரிசகனுக்குரிய உயர்ந்த மனோதர்மத்துடனும் தர்க்கத்தெளிவுடனும் சுந்தர ராமசாமி இக்கட்டுரைகளை” எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார் வண்ண நிலவன்.
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 128
விலை: 160
அன்று வெளியிடப்பட்டது: 1991
பொருள்: கட்டுரை
வகை: ஆய்வு நூல்
இவை என் உரைகள்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
எழுத்தைத் தன் இயல்பான வெளிப்பாட்டு ஊடகமாகக் கொண்ட சுந்தர ராமசாமி, பேச்சிலும் தனது படைப்பாளுமையையும் சிந்தனை வீச்சையும் வெளிப்படுத்தியவர். ஐம்பதாண்டுகளுக்கு மேல் எழுதிய அவர் கருத்தரங்குகளிலும் கூட்டங்களிலும் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இது. 1987 முதல் 2002 வரை சு.ரா. ஆற்றிய உரைகள் இத்தொகுப்பில் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை முதல் முறையாக இந்நூலில் பிரசுரம் பெற்றிருக்கின்றன. இலக்கியம், சமூகப் பிரச்சினைகள், பண்பாடு, திரைப்படம் எனப் பல பொருள்களை மையமாகக்கொண்ட உரைகள் இவை.
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 285
விலை: 325
அன்று வெளியிடப்பட்டது: 2003
பொருள்: சிறுகதை
வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு
புதுமைப்பித்தன் கதைகள் சுரா குறிப்பேடு
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெளியான இதழ்களோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிடப்பட்டு, திருத்தமான பாடத்தோடு இந்நூல் அமைந்துள்ளது. பின்னிணைப்புகளில், கதைகளை வெளியிடப் புதுமைப்பித்தன் பயன்படுத்திய புனைபெயர்கள், பதிப்புக் குறிப்புகள், பாட வேறுபாடுகள் முதலானவை இடம்பெறுகின்றன. பல்லாண்டுக் கால ஆராய்ச்சியில் உருவாகியுள்ள தொகுப்பு இது.
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 640
விலை: 620
அன்று வெளியிடப்பட்டது: 2006
பொருள்: சிறுகதை
வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு
ஆளுமைகள் மதிப்பீடுகள் (2004)
காற்றில் கரைந்த பேரோசை
விரிவும் ஆழமும் தேடி
தமிழகத்தில் கல்வி: வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல் (2000)
இறந்த காலம் பெற்ற உயிர்
இதம் தந்த வரிகள் (2002)
வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)
வாழ்க சந்தேகங்கள் (2004)
புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம் (2006)
நடுநிசி நாய்கள்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமியின் சிறுகதை, கவிதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் கவிதைத் தொகுப்பு இது. 1975இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள 29 கவிதைகளுடன் அதில் இடம்பெற்றிருந்த முன்னணி ஓவியர்களின் கோட்டோவியங்களும் இத்தொகுப்பில் முழுமையாக இடம்பெற்றுள்ளன.
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 72
விலை: 100
அன்று வெளியிடப்பட்டது: 1975
பொருள்: கவிதை
வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு
யாரோ ஒருவனுக்காக
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
காதல், காமம், மரணம், கேளிக்கை, கடவுள் துரோகம், சுய இருப்பு ஆகியவை நவீன வாழ்வில் நிகழ்த்தும் பகடையாட்டங்கள் குறித்தான சிந்தனைகள், அவற்றிற்கு மனித மனம் அரங்கேற்றும் எதிர்வினைகள், இந்தச் சிந்தனைகளுக்கும் வினைகளுக்கும் இடையேயான ஊசலாட்டம் - இவையே வா.மணிகண்டனின் கவிதைகளின் சாரம். தன்னிடமிருந்து நுரைத்துப் பொங்கும் உணர்ச்சிகள் நசுக்கப்படுகின்ற கணத்தில் வெளியேற முயற்சிக்கும் நகர மனிதனின் சிதைக்கப்பட்ட குரல்வேற்றுமைகளாக இந்தக் கவிதைகள் உருக்கொள்கின்றன.
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 60
விலை: 64
அன்று வெளியிடப்பட்டது: 2004
பொருள்: கவிதை
வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு
107 கவிதைகள்
க.நா.சுப்ரமண்யம்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
க.நா.சு நினைவோடை இளமைக்காலத்தில் புதுமைப்பித்தனுக்கு அடுத்தபடியாக சுந்தர ராமசாமியை ஈர்த்த இலக்கிய ஆளுமை க.நா.சு. எழுத்தை மட்டுமே பிடிமானமாகக் கொண்ட க.நா.சுவின் நாடோடி வாழ்க்கையின் அலட்சியமான பக்கங்கள் சு. ராவின் நினைவுகளினூடே விரிகின்றன. க.நா.சு மீது தான் வைத்திருந்த அன்பும் மதிப்பும் தோய்ந்த நட்புக்குச் சலுகையளிக்காமல் சு.ரா. கூறிச் செல்லும் விமர்சனங்களையும் இந்நூலில் காணலாம்.
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 112
விலை: 230
அன்று வெளியிடப்பட்டது: 2003
பொருள்: கவிதை
வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு
கிருஷ்ணன் நம்பி
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி தன் கதையைப் பேசும்போதும் எழுதும்போதும் நட்பு சார்ந்த உரிமையோடு ஒருமையில் அழைக்கும் ஒரே நபர் கிருஷ்ணன் நம்பி. இந்நூல் நம்பியுடனான சு.ரா.வின் அனுபவங்களின் பதிவு. சு.ரா.வுக்கும் நம்பிக்கு மிடையே நிகழ்ந்த விநோதமான அறிமுகம், தங்களை முட்டிக்கொண்டிருந்த மனநெருக்கடிக்கு ஆறுதலாக ஒருவருக்கொருவர் மாறியது, அந்த உறவில் விழுந்த முடிச்சுகள், நம்பிக்கு சரளமாகக் கைவந்த ஹாஸ்யம், அவர் தமிழ் வாசகர்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள மட்டும் அனுமதித்த அகால மரணம் போன்றவை இதில் பேசப்படுகின்றன.
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 144
விலை: 175
அன்று வெளியிடப்பட்டது: 2003
பொருள்: நினைவோடை
வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு
ஜீவா
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமியை ஈர்த்த மிகச் சில அரசியல் தலைவர்களிடையே மறுபரிசீலனைகளில் சிறிதளவும் தன் ஆளுமையின் மதிப்பை இழக்காதவர் ஜீவா. தான் சார்ந்த இயக்கத்தின் மீது எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டியிருந்த சு.ரா.வின் நட்பு ஜீவாவுக்குத் தேவையாகவே இருந்தது. தன்னுடைய கொள்கைகளை எவர் மீதும் திணிக்காமலும் அதே சமயம் அவற்றை விட்டுக்கொடுக்காமலும் தோழமையைத் தக்கவைத்துக்கொண்ட ஜீவாவின் கம்பீரத்தை சு.ரா. பதிவுசெய்கிறார்.
பிற விவரக்குறிப்பு
பக்கம்: 104
விலை: 100
அன்று வெளியிடப்பட்டது: 2003
பொருள்: நினைவோடை
வகை: நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு
சி.சு. செல்லப்பா (2003)